Sunday, April 3, 2022

நோன்பா? வெறும் பட்டினியா? (சுய பரிசோதனை)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக! இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப் படுத்தக்கூடியதாகவும், சிறு சிறு தவறுகளையும்கூட களைந்து உண்மையான/முழுமையான‌ இஸ்லாமியர்களாக வாழ நம்மை தயார் படுத்தக்கூடியதாகவும் உள்ளது. அது எப்போது..?

நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?

 சைய்யித் ஜமாலி

 • நல்லறங்கள் மாத்திரம் செய்வதற்காகவா?
 • மருத்துவ பலனா?
 • உண்ணாவிரதமா?
 • பசியை புரிந்துகொள்ளவா?
 • சுயமரியாதை
 • பிச்சை எடுத்தல்:
 • விபச்சாரம் செய்யாமலிருக்க பயிற்சி:
 • கொலைவெறியிலிருந்து மீள எளிதான பயிற்ச்சி!
 • பொய் சொல்லமலிருக்க பயிற்ச்சி!
 • ஹலாலான சம்பாத்தியம்!
 • கோபம் மற்றும் பொறாமை கொள்ளாமலிருக்க பயிற்ச்சி!

ரமலான் சிறப்பு

அஸ்ஸலாமு   அழைக்கும. 
ரமலான்  மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

ரமழானும் தர்மமும்

உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).

ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள்….

5. குவாடிலட் போர்:
ஸ்பெயினின் கொடுமையான ஆட்சி புரிந்த விசிகோத் மன்னனுக்கு எதிராக மொரோக்கோவில் அடிமை வம்சத்தில் பிறந்த பெர்பர் இனத்தை சேர்ந்த தாரிக் பின் ஜியாத் தலைமையில் ஸ்பெயின் மீது மிகவும் குறைந்த வீரர்களை கொண்டு பெரும்படையை வெற்றி கண்டு ஐரோப்பிய கண்டமே நடுங்கிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது ஹிஜ்ரி 92ஆம் ஆண்டு   ரமலான் மாதத்தில்தான். இவ்வெற்றிக்கு பிறகு சுமார் 800 ஆண்டுகள் ஸ்பெயினை (அண்டலூசியவை) முஸ்லிம்கள் ஆட்சிபுரிந்தார்கள்.

ரமலானில் முஸ்லிம்கள்!..?

 بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
இஸ்லாத்தில் ஏனைய ஆக்கங்களை விட ரமலான் குறித்தே அதிக ஆக்கங்கள் இணையத்தில் நிறைந்து காணப்படுகின்றன.,ரமலான் குறித்து புதிதாய் அறிந்து கொள்வதற்கு எதுவுமில்லை என்ற அளவிற்கு அதிகமதிகம் செய்திகள் கிடைக்கின்றன., அல்ஹம்துலில்லாஹ்..!
        

ரமலானே-வருக! வருக !-Abdul Basith Bukhari


Wednesday, October 27, 2021

நற்செயல்களில் சிறந்தது !

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அத்தியாயம்: 1, பாடம்: 1.36, ஹதீஸ் எண்: 118
و حَدَّثَنَا ‏ ‏مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ‏ ‏ح ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِبْرَاهِيمُ يَعْنِي ابْنَ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏سُئِلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ قَالَ إِيمَانٌ بِاللَّهِ قَالَ ثُمَّ مَاذَا قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ ثُمَّ مَاذَا قَالَ حَجٌّ مَبْرُورٌ ‏
‏وَفِي رِوَايَةِ ‏ ‏مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் " (நற்)செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது" என்று கூறினார்கள். "பிறகு எது (சிறந்தது)?" என்று கேட்கப்பட்டபோது, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள். "பிறகு எது (சிறந்தது)?" எனக் கேட்கப்பட்டபோது, " (பாவசெயல் எதுவும் கலவாத) ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்" என்று பதிலளித்தார்கள்.


அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

தலைமையில் இருப்பவர் கடமை தவறினால் ....


அஸ்ஸலாமு அலைக்கும்  
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டார்கள்: ''முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி, அவர்களிடம் மோசடித்தனமாக நடந்து கொள்வானாயின் அவன் மீது அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றான்.'' (அறிவிப்பாளர்: மஃகில் பின் யஸார் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள்

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
பணியாளரை மதித்த உயர்ந்த பண்பாளர்: -
 Respecting Servents
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னைச்சீஎன்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லை. அறிவிப்பவர் :அனஸ்(ரலி, ஆதாரம் : புகாரி.

குர்-ஆன் கூறும் பூமி...!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

விஞ்ஞான கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் குர்-ஆனில் அதிகமாக இடம்பெற்றாலும் அவ்வனைத்து வசனங்களிலும் அல்லாஹ்வுடைய வல்லமையை பறைச்சாற்றறுவதே பிரதான நோக்கமே தவிர அறிவியல் புத்தகமாக தன்னை காட்டிக்கொள்வதற்காக அல்ல.எனினும் குர்-ஆன் மீது அவதூறு கற்பிக்கும் நோக்கோடு களமிறங்கிய பரிணாமம் மூலம் பகுத்தறிவு பெற்றவர்கள் அவ்வபோது குர்-ஆன் கூறும் பொருளை வழக்கம்போல் தவறாக புரிந்து

அருள்மறையின் அற்புதமும் மானிடத்தின் இயலாமையும் !


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அல் ஹாபிழ் அபூ அஸ்பாக் அல் அதரி
[ மிக அண்மையில் பிரான்ஸில் மிகவும் அபூர்வமான ஒரு சம்பவம் இடம்பெற்றது. பிரான்ஸ் தனது நாட்டைச் சேர்ந்த 10 இஸ்லாமியப் பெண்களை தெரிவு செய்து அவர்களுக்கு மேற்கத்தேய ஆடைகளை அணிவித்து ''மொடல் பெண்களாக'' அவர்களை சர்வதேச மட்டத்தில் சித்தரித்துக் காட்ட விரும்பினர். அதற்காக பாரிய ஒரு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டு பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள், சிந்தனையாளர்கள் என பல முக்கியஸ்தர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர்.

இஸ்லாம் கூறும் மனிதநேயம்...!

ஹாரிஸ்  ஜமாலி
தற்போதைய இயந்திரத்தனமான உலகில் மனிதர்களிடம் மிக குறைந்து வருவது மனித நேயம் .
1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதரசகோதரிகளே…’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார் .

Friday, November 8, 2019

சமுதாய வீழ்ச்சிக்கான ஐந்து காரணங்கள்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஹாஜிர்களை நோக்கி கூறினார்கள் "உங்களுக்கு மத்தியில் ஐந்து விஷயங்கள் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்கு அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
 • எந்தவொரு சமுதாயத்தில் மானக்கேடான (விபசாரம் போன்ற) பாவங்கள் பகிரங்கமாக நடைபெறுகின்றதோ
Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!