அன்பு சகோதரர்களே,
சில தினங்களாக நமது சகோதரிகளின் செல்லிற்கு ஒரு பெண் போன் செய்து நமது பெண்களின் பெயரை சரியாக சொல்லி அவர்களின் கணவரின் பெயரையும் சொல்லி துபாயில் உங்கள் கணவர் இருக்கும் ஃபிளாட்டின் அருகில் நாங்கள் தங்கி உள்ளோம், தற்பொழுது வெகேசனில் வந்துள்ளோம் உங்கள் கணவர்தான் இந்த நம்பர் கொடுத்து பேச சொன்னார், நல்லா இருக்கீங்களா, பிள்ளைகள் நல்லா இருக்கா என்றெல்லாம் விசாரித்து அடுத்த வாரம் திரும்ப துபாய் செல்கிறோம் போகும் முன் வந்து பார்த்து விட்டு செல்கிறோம் என்று சொல்கிறார்கள்,
சம்பந்தப்பட்ட சகோதரிகள் தங்கள் கணவருக்கு போன் செய்து விபரம் கேட்கும்பொழுது அது பொய்யான தகவல் என்று தெரிகிறது.
இவர்களின் நோக்கம் என்ன?உறவினர்கள் யாரும் கேலி செய்கிறார்களா என்று விசாரிக்கும் பொழுது அதுவும் இல்லை!அவர்களுக்கு நமது சகோதரிகளின் போன் நம்பர் எப்படி கிடைக்கிறது, எப்படி நம்மை பற்றிய தகவல்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன? மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இது.
வெளிநாடுகளில் உள்ள சகோதர்கள் அனைவரும் உடனடியாக தம் தம் மனைவியருக்கும், குடும்பத்தாருக்கும் இத்தகவலை தெரிவித்து இது போல் யாரும் போன் செய்து பேசினால் வேறு எந்த தகவலும் கொடுக்கவேண்டாம் என எச்சரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நேற்று (20.02.11) இரவு 09.30 மணிக்கு எனது மனைவிடம் இருந்து call me என்று ஒரு SMS வந்தது உடனடியாக நான் அவருக்கு போன் செய்யும் பொழுது லயன் பிசியாக இருந்தது, 5 நிமிடம் கழித்து மீண்டும் அழைத்தேன் மனைவியின் குரலில் ஒரு பதஷ்டம் என்ன என்று கேட்கும் பொழுது உங்களுக்கு
SMS செய்த மறு நொடி ஒரு போன் வந்தது நீங்கள் தான் என்று நினைத்து நலம் விசாரித்தேன் அதற்கு அவன் சொல்லு சொல்லு என்று சொன்னான், மறுபுறம் குரலில் வித்தியாசம் இருந்ததால் உடனே கட் செய்து விட்டேன் திரும்பவும் அவன் நம்பரில் இருந்து உங்கள் பெயர் மட்டும் போட்டு SMS வந்தது மீண்டும் அவன் போன் செய்தான்,நீங்கள் தான் என்று நினைத்து மறுபடியும் எடுத்தேன், யார் பேசுவது? இது எந்த ஊர்? என்று கேட்கிறான், நான் பயந்து வைத்துவிட்டேன் என்று சொன்னார்கள். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது மீண்டும் அந்த நம்பர் வருவதாக சொன்னார்கள் நம்பர் என்ன வென்று கேட்டு வாங்கிக்கொண்டு நான் அவனுக்கு போன் செய்தேன்,உறக்கத்தில் இருந்து எடுப்பவனைப் போல் எடுத்து ஹலோ என்று சொன்னான், யார் நீ? உனக்கு எந்த நம்பர் வேண்டும் ஏன் இதற்கு SMS செய்தாய் எப்படி உனக்கு இத நம்பர் கிடைத்தது என்று கேட்டவுடன் இணைப்பை துண்டித்துவிட்டான்.
ஆகையால் நண்பர்களே, நம்மை நோக்கி எதுவோ? யாரோ? குறி வைக்கிறார்கள் அதில் நமது குடும்பத்தார்கள் சிக்கி விடாமல் இருக்க அனாமத்தான கால்கள் எதுவும் வந்தால் அதற்கு பதில் கொடுக்க வேண்டாம் என்று தங்கள் மனைவிமார்களிடமும் குடும்பத்தார்களிடமும் எச்சரிக்கை செய்யவும் .
*** ஊரில் உள்ள நண்பர்கள் அந்த நம்பரை டிரேஸ் செய்து விசாரிக்க முடியுமானால் எனக்கு மெயில் செய்யவும் அந்த நம்பர்களை தருகிறேன்.
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
அக்பர் அலி HR
Regards,
Mohamed Halith. J
http://tntjkaraikal.blogspot.