Sunday, March 10, 2024


அனைவர்களுக்கும் புனித ரமலான் நல் வாழ்த்துக்கள்.....!


ரமலானே-வருக! வருக !-Abdul Basith Bukhari


நோன்பா? வெறும் பட்டினியா? (சுய பரிசோதனை)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக! இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப் படுத்தக்கூடியதாகவும், சிறு சிறு தவறுகளையும்கூட களைந்து உண்மையான/முழுமையான‌ இஸ்லாமியர்களாக வாழ நம்மை தயார் படுத்தக்கூடியதாகவும் உள்ளது. அது எப்போது..?

நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?

 சைய்யித் ஜமாலி

  • நல்லறங்கள் மாத்திரம் செய்வதற்காகவா?
  • மருத்துவ பலனா?
  • உண்ணாவிரதமா?
  • பசியை புரிந்துகொள்ளவா?
  • சுயமரியாதை
  • பிச்சை எடுத்தல்:
  • விபச்சாரம் செய்யாமலிருக்க பயிற்சி:
  • கொலைவெறியிலிருந்து மீள எளிதான பயிற்ச்சி!
  • பொய் சொல்லமலிருக்க பயிற்ச்சி!
  • ஹலாலான சம்பாத்தியம்!
  • கோபம் மற்றும் பொறாமை கொள்ளாமலிருக்க பயிற்ச்சி!

Wednesday, January 10, 2024

பெற்றோரைப் பேணி நடந்தால் மறுமையில் சுவர்க்கம்!

ஏக இறைவனின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும்

இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.

தாரம் வரும் முன்பு பெற்றோராய் கண்ணுக்குத் தெரிந்தவர்கள் தாரம் வந்த பின்பு வேற்றோராய் தெரிகிறார்கள் .

Wednesday, September 13, 2023

"நோயாளியை நலம் விசாரித்தல்"

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ


பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி அவர்கள் எங்களை ஏவினார்கள்(ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இஸ்லாம் கூறும் மனிதநேயம்...!

ஹாரிஸ்  ஜமாலி
தற்போதைய இயந்திரத்தனமான உலகில் மனிதர்களிடம் மிக குறைந்து வருவது மனித நேயம் .
1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதரசகோதரிகளே…’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார் .

Tuesday, June 27, 2023

வசதி இருந்தும் ஹஜ் செய்யாதவர்களே, உங்களைத்தான்!

 بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
எவர் சிறப்புமிக்க கஃபதுல்லாஹ் வரை செ(ன்று தன் இ)ல்ல(த்திற்குத் திரும்பிவர) வாகனமும் உணவும் பெற்றிருக்கின்றாரோ அவர் ஹஜ்ஜுச் செய்யவில்லையானால் அவர் யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ, இறந்து விடுவதில் அல்லாஹ்வுக்கு அவரைப் பற்றி எவ்வித அக்கரையும் இல்லை.  அன்றி (நான் கூறும்) இது ''... .. .. எவர்கள் அங்கு பிரயாணம் செய்ய ஆற்றலுடையவர்களாக

ஹஜ் புகட்டும் படிப்பினைகள்…..

புனித ஹஜ்ஜுடைய காலமிது. உலகின் எட்டுத் திக்குகளிலுமிருந்து இலட்சோப லட்சம் மக்கள் இன, நிற, மொழி, பிரதேச பேதங்களை மறந்து இஸ்லாத்தின் ஐந்தாம் பெருங் கடமையை நிறைவேற்ற ஓர் இடத்தில் ஒன்றுகூடும் சந்தர்ப்பம் இது. வருடா வருடம் சமுதாயத்தின் ஒற்றுமையை அழகாக வெளிக்காட்டும் இவ்வாறான ஒரு மாபெரும் சனக்கூட்டத்தை உலகில் வேறு எங்கும் காண்பதரிது.

ஹஜ்ஜின் சிறப்புகள்


ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் சதகத்துல் பித்ர் என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்கிய்யா எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

Sunday, April 3, 2022

ரமலான் சிறப்பு

அஸ்ஸலாமு   அழைக்கும. 
ரமலான்  மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183
Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!