Wednesday, April 27, 2011

சிரித்து வாழ வேண்டும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இன்முகம் காட்டுவது ஒரு தர்மம்' என்று போதித்திருக்கிறார்கள்.

ஒருநாள் ஒரு மூதாட்டியார் நபிகளாரைத் தேடி வந்தார். அவரை வரவேற்ற நாயகம்(ஸல்) அவர்கள், ""அம்மா! தங்கள் தேவை என்ன?'' என்றார்கள். "


"இறைத்தூதரே! எனக்கு ஒரு ஒட்டகம் தேவைப்படுகிறது. பயணம் செய்வதற்கென எனக்கு ஒட்டகமோ, கோவேறு கழுதையோ இல்லை. நெடுந்தூர பயணம் செய்யும் சமயங்களில் சிரமப்படுகிறேன்,'' என்றார்.

அந்த மூதாட்டியின் வேண்டுகோளைக் கேட்டு புன்னகைத்த நாயகம் (ஸல்) அவர்கள், ""சரி...ஒரு ஒட்டகக்குட்டியை வரவழைத்துத் தருகிறேன்,'' என்றார்கள்.

அந்த மூதாட்டி, ""ஒட்டகக்குட்டி என்னுடைய தேவையை நிறைவு செய்யாதே! என்னுடைய சுமைகளைச் சுமந்து செல்ல அதனால் இயலாதே. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?'' என்றார்.

""இல்லை, இல்லை...ஒரு ஒட்டகக்குட்டியைத் தான் உங்களுக்கு என்னால் தர முடியும். அதில் தான் நீங்கள் பயணிக்க வேண்டும்,'' என்ற நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பணியாளரிடம் கண் ஜாடை காட்டினார்கள்.

சற்று நேரத்தில், பணியாளர் ஒரு பெரிய ஒட்டகத்துடன் வந்து நின்றார்.

""நாயகமே! தாங்கள் ஒட்டகக்குட்டியைத் தருவதாகத் தானே சொன்னீர்கள். இப்போது பெரிய ஒட்டகத்தை வரவழைத்திருக்கிறீர்களே,'' என்றதும்,

நாயகம் சிரித்தபடியே, ""அம்மையாரே! ஒவ்வொரு ஒட்டகமும் அதன் தாய்க்கு குட்டியாகத்தானே இருந்திருக்கும்,'' என்றார்.

இதைக் கேட்ட அந்த அம்மையார் வாய்விட்டு சிரித்தார். மனிதர்கள் சிரித்து வாழ வேண்டும். மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.
http://onlyoneummah.blogspot.com
Photobucket
இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!