தற்போதைய இயந்திரத்தனமான உலகில் மனிதர்களிடம்
மிக குறைந்து வருவது மனித நேயம் .
1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில்
அனைவரையும்,
‘‘சகோதர… சகோதரிகளே…’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார் .
“அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு” – என்று திருவள்ளுவர் மனித நேயத்தை
வலுப்படுத்தினார் . “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று வள்ளலார் வாடினார் .
இப்படி பல தலைவர்களும் மனித நேயத்தை மக்கள்
மனதில் பதிய வைத்தார்கள் .
மனித நேயத்தை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது ??
முஹம்மது நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள்
கூறினார்கள் மனிதர்களிடம் அன்பு செலுத்தாதவன் மீது இறைவன் அன்பு செலுத்த மாட்டான்
.
இஸ்லாத்தில் இரண்டு வகையான (கட்டாயமாக செய்ய வேண்டிய )கடமைகள்
இருக்கிறது
1.
மனிதன்
இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்
2.
ஒரு நாளைக்கு ஐந்து நேரங்கள் தொழுவது, ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது, தர்மங்கள் செய்வது,வசதி இருந்தால் ஹஜ் செய்வது இவை அனைத்தும் ஒரு மனிதன்
இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் .
2.மனிதன் மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் .
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் .
பிள்ளைகள் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய
கடமைகள்
கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் .
மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் .
அக்கம் பக்கத்துக்கு வீட்டில்
இருப்பவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் (அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி அண்டை வீட்டார்கள்
பசித்திருக்க நீங்கள் புசிக்க வேண்டாம் என்பது நபி மொழி)
இப்படியாக மனிதன் மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் தொடர்கிறது …
.
ஒரு மனிதன் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை வைத்து விட்டால் ( தொழாமல் , நோன்பு வைக்காமல் ,தான தர்மங்கள் செய்யாமல் ,ஹஜ் செய்யாமல் இருந்து விட்டால் ) இறைவன்
நாடினால் தண்டிக்கலாம் அல்லது மன்னிக்கலாம் .
ஒரு மனிதன் பிற மனிதனுக்கு செய்ய வேண்டிய
கடமைகளில் குறை வைத்து விட்டால் பாதிக்கப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை இறைவன்
மன்னிக்க மாட்டான் என்ற கடுமையான எச்சரிகையின் மூலமாக இஸ்லாம் மனித நேயத்தை
கட்டாயமான
சட்டமாக்குகிறது.. .
இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே
அளவு அல்லது அதை விட அதிகமாக மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும் . மனிதர்களிடம் அன்புடனும் பாசத்துடனும் சகிப்புத்தன்மையுடனும்
நடந்து கொள்ள வேண்டும்
.
முஹம்மது நபியவர்கள் (ஸல் ) அலைஹி வசல்லம்
கூறினார்கள்
பாதையில் ஒரு
கல் கிடைக்கிறது .அந்த வழியாக செல்லும் ஒரு மனிதன் இந்த கல் பிறருக்கு துன்பம்
கொடுக்குமே யாராவது இதில் தடுக்கி விழுந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில்
அந்த கல்லை ஓரமாக எடுத்து போட்டால் இறைவன் அந்த ஒரு நற்செயலை ஏற்றுக்கொண்டு
அம்மனிதனை சுவர்க்கத்தில் நுழைத்திடுவான் என கூறி பாதையில் கிடக்கும் ஒரு கல்லால் கூட ஒரு
மனிதனுக்கு துன்பம் வரக்கூடாது அதை ஓரமாக எடுத்து போட்டு பாதையில் நடக்கும்
மனிதர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று மனித நேயத்தோடு வாழ கற்றுகொடுதார்கள் . .
முஹம்மது நபி (ஸல் ) அலைஹி வசல்லம் அவர்கள்
தன தோழர்களுடன் பேசிகொண்டிருந்தார்கள் அந்நேரத்தில் அவ்வழியாக இறந்து விட்ட ஒரு
யூதரின் உடலை தூக்கிக்கொண்டு வந்தார்கள்.
முஹம்மது நபியவர்கள் உடனே எழுத்து
நின்றார்கள் .
நபியின் தோழர்கள் இவர் யூதரல்லவா அவருக்காக
ஏன் எழுந்திருக்கிறீர்கள்?
என கேட்டார்கள்
நபியவர்கள் அவரும் மனிதன்தானே என்று பதில்
கூறினார்கள்.
இறந்து விட்ட மனிதர் பிற மதத்தை சார்ந்தவராக
இருந்தாலும் அவருக்கும் மரியாதை செய்ய வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கொள்கை.
,முஹம்மது
நபி(ஸல்)
அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, ‘எதிரிகளைப் (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரின்
அழிவுகளிலிருந்து) பாதுகாக்கும்படி கேளுங்கள். (வேறு வழியின்றி போர்க்களத்தில்)
எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால் (போரின் துன்பங்களைச் சகித்துப்) பொறுமையாக
இருங்கள்.
இப்படிப்பட்ட சகிப்புதன்மையைதான் இஸ்லாம்
போதிக்கிறது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும்
மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், ”ஒரு மனிதனிடம்
நான்
நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கேட்பான் .
அதற்கு அம்மனிதன் ”என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான்
எப்படி நலம் விசாரிக்க முடியும்?” என்று கேட்பான்.
அதற்கு அல்லாஹ், ”என்னுடைய இந்த அடியான்
நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ
நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? என்று கூறுவான் .
இன்னும் நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ
எனக்கு உணவு அளிக்கவில்லை”
என்று கூறுவான்.
அதற்கு அம்மனிதன் , ”என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க
உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?” என்று கேட்பான்.
அதற்கு அல்லாஹ், ”என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு
வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ
உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத்
தெரியாதா?
என்று கூறுவான்.
மற்றொரு மனிதனிடம் நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால்
நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான்.
அதற்கு அம்மனிதன் , ”என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க
உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான்.
அதற்கு அல்லாஹ், ”என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர்
கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர்
கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
மனிதர்களுக்கு உணவு கொடுப்பது நீர் அருந்த
செய்வது நலம் விசாரிப்பது போன்ற உதவிகளை செய்வதின் மூலமாக இறைவனை காணலாம் என்று
அல்லாஹ் கூறி ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறான் .
ஒரு பெண் இரவு முழுவதும் நின்று வணங்கினாள் ஆனால் தன வீட்டிலிருந்த பூனைக்கு உணவு
கொடுக்கவில்லை அதனால் அவள்
நரகம் செல்வாள்
என்றும்
ஒரு பெண் காலம் முழுவது விபச்சாரம்
செய்துகொண்டிருந்தாள்
தாகத்தால் துடித்த ஒரு நாய்க்கு நீர் கொடுத்தாள் ஒரு
நாய்க்கு நீர்
கொடுத்ததினால்
அவள் சுவர்க்கம் செல்வாள் என்றும் நபியவர்கள் கூறினார்கள் .
”ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான
தாகம் ஏற்பட்டது. உடனே,
அவர்
(அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதி¬ருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு
கிணற்றி¬ருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று
தாகத்தால் தவித்து,
நாக்கைத் தொங்க
விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ”எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும்
(கடுமையான தாகம்) ஏற்பட்டிருக் கின்றது போலும்” என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது
காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால்
கவ்விக் கொண்டு,
மேலே ஏறி வந்து
அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது
பாவங்களை) மன்னித்தான்”
என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும்
விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ”ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்
பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.
மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்குகளிடமும்
கருனை உள்ளதுடன் நடந்துகொள்வதையே இஸ்லாம் போதிக்கிறது.
எனவே நாமும் மக்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொண்டால் இவ்வுலகமே சுவர்க்கமாக மாறி விடும் ..
http://www.vadhini.com/2015/12/18/